Young, Whitney M.

யுங் விட்னி (1921 -1971) test

தமிழ் விளக்கம்

யுங் விட்னி (1921 -1971) - சமூகப்பணியாளர் மற்றும் அமெரிக்காவின் பிரபலமான சிவில் உரிமைப் (மனித உரிமைப்) போராளி. 1960 களின் தொடக்கத்தில் நகர்ப்புறங்களுக்கான தேசிய சம்மேளனம் என்ற அமைப்பைத் தலைமை ஏற்று நடத்தியவர். பல சமூக சேவை நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை வகித்தார்.
பார்க்க: National Urban League - நகர்ப்புறங்களுக்கான தேசிய சம்மேளனம் - அமெரிக்க நகரங்களில் ஆப்ரிக்கா அமெரிக்கர்கள் மற்றும் பிற சிறுபான்மை இனத்தவருக்கு எதிராகக் கடைப்பிடக்கப்பட்டு வந்த இனவிலக்கலுக்கு எதிராகவும், நகரங்களுக்குக் குடிபெயரும் நீக்ரோக்களுக்கு வீட்டுவசதி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும், நகர வாழ்வில் அனைவருக்குமான சமபங்கை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் உருவான சேவை நிறுவனம். இது தொழிற்சாலைகளில் பணிபுரியும் நீக்ரோக்களின் முன்னேற்றதிற்க்கான குழு (Committee for the Improvement of Industrial Conditions Among Negroes in New York (founded in 1906), கருப்பினப் பெண்கள் பாதுகாப்பிற்கான தேசியக் குழு (National League for the Protection of Colored Women (founded 1906), நகரங்களில் வாழும் நீக்ரோக்களின் மேம்பாட்டிற்கான சம்மேளனம் (National League on Urban Conditions Among Negroes) என்ற மூன்று நிறுவனங்களும் இணைந்து நகரங்களுக்கான தேசிய அமைப்பாக உருவெடுத்தது. நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, ஏறக்குறைய 110 கிளைகளுடன் நாடு முழுவதும் செயல்படுகிறது. test

English

(1921-1971) Social worker and civil rights leader who led the National Urban League through the civil rights movement in the early 1960s, while serving as president of several social work organizations. test