Youngdahl, Benjamin (1897-1970)
பெஞ்சமின் யங்க்தால் (1897 -1970)
தமிழ் விளக்கம்
பெஞ்சமின் யங்க்தால் (1897 -1970) - சமூகப்பணிக் கல்வியாளர். சமூகப் பணிக்கான சமூகச் செயல்பாடு கோட்பாடுகளைத் தொகுத்து விளக்கியவர். அரசு நிர்வாகியாக தன்னுடைய பணியைத் தொடங்கி, 1930 களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தத்தைச் சமாளிக்க, ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அறிமுகப்படுத்திய புதிய ஒப்பந்தம் திட்டத்தில் முக்கியப் பொறுப்புகளை ஏற்று பல திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர். அதன் பிறகு செயின்ட் லூயிஸிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் வாரென் பிரவுன் சமூகப்பணிக் கல்லூரியின் கல்விப்புலத் தலைவராகப் பொறுப்பேற்று, சமூகப்பணி பயிற்சி முறைகளை மேம்படுத்தவும், ஆப்பிரிக்க - அமெரிக்க (கறுப்பின) மாணவர்கள் சமூகப்பணி பயில ஊக்கமளித்தும், சமூகப்பணி ஆய்வுப் பட்டத்தை அறிமுகப்படுத்தவும் காரணமாயிருந்தார். இவர் எழுதிய சமூகப்பணியும் சமூகச் செயல்பாடும் மிக முக்கியமான சமூகப்பணி இலக்கியமாக கருதப்படுகிறது.
English
Social work educator who delineated the principles of social activism for the profession. He began his career as an administrator of state public welfare programs and helped implement many New Deal programs. Later, while dean of the George Warren Brown School of Social Work at Washington University, St. Louis, he upgraded training standards, admitted African American students, established the doctoral program, and wrote the influential 1966 text Social Action and Social Work.