Younghusband, Eileen (1902-1981) test
எலின் யங்ஹஸ்பண்ட் (1902-1981)
தமிழ் விளக்கம்
எலின் யங்ஹஸ்பண்ட் (1902-1981) - புகழ் பெற்ற லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பேராசிரியையாகப் பணிபுரிந்த இவர், இங்கிலாந்தில் சமூகப்பணிக் கல்வியைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றிய சமூகப்பணிக் கல்வியாளர். சமூகப்பணி புத்தகங்கள் பல எழுதியவர். இரண்டாம் உலகப்போரின் போது பொதுமக்கள் ஆலோசனைக் குழுவை ஏற்படுத்திப் போர்க்கால நடவடிக்கைகளில் மக்கள் பங்கேற்பைப் பெற உதவினார். பிரிட்டனின் சிறார் நீதி அமைப்பைச் செம்மைப்படுத்தவும், சர்வதேச சமூகப்பணிக் கல்லூரிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ததிலும் இவருடைய பங்கு முக்கியமானது. இவருடைய சமூகப்பணியும் சமூக மாற்றமும், குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுடனான சமூகப் பணி போன்ற புத்தகங்கள் சமூகப்பணியின் முக்கிய புத்தகங்களாகக் கருதப்படுகின்றன.
English
Author, educator, and a major organizer of British social work, Dame Younghusband was on the faculty of the London School of Economics for many years. She helped establish Great Britain's citizen's advice bureaus (CABs) in World War II and the modern British juvenile court system, and she redeveloped the International Association of Schools of Social Work (IASSW). Her classic social work texts include Social Work and Social Change (1964) and Casework with Families and Children (1965).