zero population growth
சுழியக் குடித்தொகை வளர்ச்சி, மக்கள் தொகை வளராமை
தமிழ் விளக்கம்
ஒரு சமூகத்தில் பிறப்பும் இறப்பும் சமமாகி மக்கள் தொகை ஸ்திரப்பட்டு (கூடவோ குறையவோ செய்யாமல்) நிற்கும் நிலை. இது ஒரு ஆரோக்கியமான நிலை என்று நிபுணர்களின் கருத்து. இந்த நிலையை எட்ட பாலியல் கல்வி, பெண்ணுரிமை, பெண்கல்வி, சுற்றுச் சூழல் மேம்பாடு, மருத்துவ வசதிகள், குடும்பக்கட்டுப்பாடு மற்றும் கருத்தடை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், அதிகக் குழந்தை பெறுபவர்களுக்கு சலுகைகள் மறுத்தல் அல்லது வரிவிதித்தல் போன்ற செயல்களின் மூலம் அடையலாம். மக்கள் தொகை வளர்ச்சியை ஸ்திரப்படுத்துதல் என்பது சமூகப் பொருளாதார, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததால் இதை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கொண்டு செலுத்த அரசு மற்றும் சமூக இயக்கங்கள் பாடுபட்டு வருகின்றன.
English
A state of stability in the population in which the number of births and deaths are equal. Advocates suggest that this is to be achieved through improved sex education, contraception, family planning, and sometimes tax penalties for those who have more children than prescribed. Population stability is a policy goal for some nations and an international movement supported by those concerned about the social, economic, and environmental costs of the expanding world population. A formal organization, also known as Zero Population Growth, was established in 1968 to promote these goals.