zero tolerance policies

(சில செயல்களை) இம்மியும் சகித்துக் கொள்ளாத கொள்கைகள்

தமிழ் விளக்கம்

அரசோ அல்லது ஒரு நிறுவனமோ, சில செயல்களைச் சகித்துக் கொள்ளமுடியாது என்று வெளிப்படையாக எச்சரிக்கும் நிலைப்பாடு. எடுத்துக்காட்டாக பெண்ணடிமை வியாபாரத்தை இம்மியும் சகியா இயக்கம் (Zero Tolerance Campaign against Trafficking of Women) போன்று, மாணவர்களிடம் போதை மருந்துப் பழக்கமிருந்தாலோ அல்லது புழக்கத்தில் இருந்தாலோ கல்வி நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படுவர் என்ற அரசோ அல்லது அந்தக் கல்வி மாவட்டத்தினரோ கண்டிப்பாகக் கடைப்பிடிக்கும் நடைமுறை.

English

An organization's or government's explicit ruling that a specified intentional act will result in some sanction including expulsion. For example, a school district's zero tolerance for the possession of drugs can result in the offending student's being temporarily or permanently expelled.