Zionism
யூதவியம், யூதர் தாயக இயக்கம், யூத ஆதரவு இயக்கம்.
தமிழ் விளக்கம்
கடந்த காலத்தில் யூதர்களுக்கென்று தனி நாடு இல்லை. தங்களுக்கென்று ஒரு வாழிடத்தை உருவாக்க யூத தேசிய நிதி எனும் அமைப்பை, நிதியை உருவாக்கி அதை வைத்துக்கொண்டு பாலஸ்தீனப் பகுதியில் ஆட்டோமன் மற்றும் அரேபியர்களிடமிருந்து நிலங்களை வாங்கத் தொடங்கினர். பிற நாடுகளில் சிறுபான்மையாராக வாழ்ந்து இனவேற்றுமையாலும் பிற துன்பங்களாலும் உழன்ற யூதர்கள் அங்கு குடியேற ஆரம்பித்தனர். தியோடோர் ஹெர்ட்சு (1860–1904) என்னும் ஆஸ்திரிய யூதர் சியோனிய இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். 1896 ல் ஜெர்மானிய மொழியில் டெர் யூடென்ஸ்டாட் (யூதர் நாடு) என்னும் வெளியீட்டைக் கொண்டு வந்தார். அதற்கு அடுத்த ஆண்டு, முதல் உலக சியோனியப் பேரவையைக் கூட்ட உதவினார். இதைத் தொடர்ந்து யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேற ஊக்குவிக்கப்பட்டனர்.
சியோனிய இயக்கம் தொடங்கிய பின்னர் பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறுவது அதிகரித்தது. ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் காரணமாக ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர், ஏராளமான வெளி நாட்டு யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினர். சீயோனிசம் என்பது இசுரேலிய தேசம் எனும் வரையறுக்கப்பட்ட இடமான யூத அரசுக்கு உதவும் யூதர் மற்றும் யூத பண்பாடு தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும். சீயோனிசம் என்பது, யூதர்கள் அவர்கள் அடையாளத்தைக் காக்கவும், ஏனைய சமூகங்களிலும் அவர்கள் உள்வாங்கப்படுதலை எதிர்த்தும், யூத எதிர்ப்பு, வெளியேற்றப்படல், துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து யூதர்களைப் பாதுகாக்க அவர்களை இசுரேலுக்கு திரும்பச் செய்வதற்கு பரிந்து பேசல் ஆகிய முயற்சிகளுக்கு உதவுகின்றது

English
The worldwide social movement whose goal is to help maintain and develop the nation of Israel, primarily through fundraising, political advocacy in nations having relations with Israel, the facilitation of immigration to Israel, and public relations campaigns. The movement officially started in 1897. The World Zionist Congress, the principal organization, has no official connection with the government of Israel.