zoophobia
விலங்குகள் கண்டு இயற்கை மீறிய பேரச்சம், விலங்கச்சம், விலங்கு அச்சம்
தமிழ் விளக்கம்
விலங்குகள் மற்றும் பூச்சியினங்கள் குறித்த பயம். எடுத்துக்காட்டாகப் பின்வரும் பயங்களைச் சொல்லலாம் - பூச்சிகள் மற்றும் புழுக்கள் மீதான பயம் (acarophobia), சிலந்திகளைக் கண்டு பயம் (arachnophobia), பூனைகளைக் கண்டு பயம் (ailurophobia), நாய்களைக் கண்டு பயம் (cynophobia), பூச்சிகளைக் கண்டு பயம் (entomophobia), பாம்புகளைக் கண்டு பயம் (lepidophobia), எலிகளைக் கண்டு பயம் (musophobia).
English
Pathological fear of animals.