Zwingli, Huldreich (1484-1531)

ஸ்விங்லி, ஹல்ட்ரெக் (1484-1531)

தமிழ் விளக்கம்

ஸ்விங்லி, ஹல்ட்ரெக் (1484-1531) முற்போக்கு சிந்தனையுள்ள கிறிஸ்தவ போதகர். ஜூரிச் நகர ஏழைகளின் நலனுக்காக இவர் முன்னெடுத்த நலத்திட்டங்கள், பின் சுவிட்சர்லாந்து முழுவதும் பின்பற்றப்பட்டது. இவரால் முன்னெடுக்கப்பட்ட ஜூரிச் நகர ஏழ்மையொழிப்புத் திட்டத்தில், வேலைவாய்ப்பு, கல்வி, சத்துணவு, குழந்தைகள், பெரியவர்கள், ஊன்முற்றோர்களுக்கான சில பாதுகாப்பு போன்றவை அடங்கியிருந்தன. இந்த நலத்திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான நிதிதிரட்டல் போன்ற பல செயல்திட்டங்கள் நடைமுறையில் இருந்தன. இந்த முன்மாதிரி சுவிட்சர்லாந்து நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றப்பட்டன.

English

Reformation clergyman who established and developed a public welfare plan for the poor people of Zurich and later the rest of Switzerland. The model was emulated by many other cities and states. The system provided work, education, and nutrition; some protections for children, older people, and people with disabilities; and a system of fundraising to pay for the program.